பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், சியோமி தலைமை செயல் அதிகாரி புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி புதிய ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மெமரி கார்டு ஸ்லாட் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார். முந்தைய சியோமி ஸ்மார்ட்போன்களில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்ட நிலையில் இம்முறை ஒற்றை டிரேவில் இரண்டு சிம் கார்டு வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் சான்று வழங்கும் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தகவல்களில் உயர் ரக ஸ்மார்ட்போனில் 13 எம்பி செல்ஃபி கேமரா, செல்ஃபி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், சியோமி தலைமை செயல் அதிகாரி புதிய ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் குறைந்த வெளிச்சத்திலும் தலைசிறந்த புகைப்படங்களை எடுக்கும் வசதி கொண்டிருக்கும் என்பதை உறுதி செய்துள்ளார்.
புதிய சியோமி ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்..,
சியோமி ரெட்மி நோட் 5A:
- 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2, ஜி.பி.எஸ்.
- 3000 எம்ஏஎச் பேட்டரி
சியோமி ரெட்மி நோட் 5A பிரைம் / ப்ரோ:
- 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
- கைரேகை ஸ்கேனர், இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2, ஜி.பி.எஸ்.
- 3000 எம்ஏஎச் பேட்டரி
சியோமி ரெட்மி நோட் 5A சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சீன நேரப்படி ஆகஸ்டு 21-ம் தேதி இரவு 7.30 (இந்திய மதிப்பில் மாலை 5.00 மணி) மணிக்கு துவங்குகிறது.