செய்திகள்

சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 5A அறிமுகம் செய்யப்பட்டது

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி நோட் 5A முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

பீஜிங்:

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி நோட் 5A பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5.5 இன்ச் எப்டி ஸ்கிரீன் மற்றும் 13 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்டான்ர்டு மாடலில் ஸ்ன்பாடிராகன் 425 சிப்செட் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ள நிலையில், டாப் என்ட் மாடலில் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் மற்றும் 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பின்புற கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு ஸ்மார்ட்போ்களிலும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், இரண்டு ஸ்லாட்டிலும் நானோ சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. 

சியோமி ரெட்மி நோட் 5A சிறப்பம்சங்கள்:

- 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே

- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்

- 2 ஜிபி ரேம்

- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் MIUI 9

- டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிலாஷ், f/2.2 அப்ரேச்சர், PDAF

- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 

- 3080 எம்ஏஎச் பேட்டரி

டாப் என்ட் ரெட்மி நோட் 5A சிறப்பம்சங்கள்:

- 5.5 இன்ச் 1280x720 எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்

- 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

- 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட், MIUI 9

- டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர், PDAF

- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்

- கைரேகை ஸ்கேனர்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், GPS / GLOASS

- 3080 எம்ஏஎச் பேட்டரி

புதிய ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் பிளாட்டினம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டான்ர்டு மாடல் விலை 699 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,720 என்றும் டாப் என்ட் 3ஜிபி ரேம் கொண்ட மாடல் 899 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,645 மற்றும் 4ஜிபி ரேம் கொண்ட மாடல் 1199 யவுான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.11,530 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது.