சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் எண்ட்ரி-லெவல் சிறப்பம்சங்களை கொண்டிருந்த நிலையில், தலைசிறந்த அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 5 உருவாக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானது. அந்தவகையில் புதிய ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 பிளஸ் என இரண்டு மாடல்கள் வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 16 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்படும் என்றும் டூயல் கேமராக்கள் செங்குத்தாக பொருத்தப்படும் என கூறப்படுகிறது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு மற்றும் பின்புற கைரேகை ஸ்கேனர் கேமராவின் கீழ் வழங்கப்படலாம். இதன் மேல்புறத்தில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஐ.ஆர். பிளாஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்ப்ளேவை பொருத்த வரை 5.5 இன்ச் FHD 1080 பிக்சல் மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630 அல்லது ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ள ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 3790 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவிக் சார்ஜ் 3.0 வழங்கப்படும் என கூறப்படுகிறது.
விலையை பொருத்த வரை ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் 1200 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.11,800 மற்றும் 4 ஜிபி + 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் 1400 யுவான் அதாவுது இந்திய மதிப்பில் ரூ.13,800 மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் 1500 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,800 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.