செய்திகள்

விரைவில் வெளியாகும் சியோமி ரெட்மி நோட் 5: முழு தகவல்கள்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்நிறுவனம் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனினை வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சியோமி ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் ரெட்மி நோட் 4 பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை தொடர்ந்து ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனினை சியோமி நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் ஃபுல் ஸ்கிரீன், 18:9 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரெட்மி 5, ரெட்மி 5A மற்றும் ரெட்மி 5 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக ரோலன்ட் குவான்ட் எனும் டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார். இதில் பிளஸ் வகை ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி, டிஸ்ப்ளே, அதிக்கப்படியான ஸ்டோரேஜ் மற்றும் ரேம் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் ரெட்மி 5A (16 ஜிபி) ஸ்மார்ட்போன் ரோஸ் கோல்டு, கோல்டு, பிளாக் மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி 5 ஸ்மார்ட்போன் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, பிளாக் மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.  

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்து ஸ்லாஷ்லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் வழக்கமான வடிவமைப்பை தவிரித்து, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட பெசல் லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் ஹோம் பட்டன் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகளில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் இஉல்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி + 5 எம்பி என டூயல் பிரைமரி கேமரா, 12 எம்பி செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.