புதுடெல்லி:
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 விற்பனை இன்று மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. பிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ. (Mi.com) இணையத்தளங்களில் விற்பனை நடைபெற உள்ளது. ரெட்மி நோட் 4 விலை இந்தியாவில் ரூ.9,999 முதல் துவங்குகிறது.
ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்ட நோட் 4 ஸ்மார்ட்போன் மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டது. 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி ரூ.9,999, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி ரூ.10,999 மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் கோல்டு, கிரே, மேட் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் மெமரியுடன் மெமரியை கூடுதலாக 128GB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அழகிய புகைப்படங்களை எடுக்க கூடுதலாக கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோட் 4 ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த MIUI 8 யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டுள்ள ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.