இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்கப்படுவதாக அந்நிறுவன தலைவர் மனு ஜெயின் அறிவித்துள்ளார். அந்த வகையில் ரெட்மி நோட் 4 விலை இந்தியாவில் ரூ.9,999 முதல் துவங்குகிறது.
இந்தியாவில் நம்பர் 1 ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 4 விலையில் ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கிறோம் என மனு ஜெயின் தனது டுவிட்டில் குறிப்பிட்டிருந்தார்.
விலை குறைப்பு மூலம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.9,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு பிளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் பொருந்தும். ரெட்மி நோட் 4 விலை குறைக்கப்பட்டிருப்பதால் மோட்டோ ஜி5, நோக்கியா 5 மற்றும் கேலக்ஸி ஜெ7 (2016) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியாக அமையும்.
பிளிப்கார்ட் சலுகைகள்:
ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு, பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.11,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதலாக ஐந்து சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 4 சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் ஃபுல் எச்டி, 1080x1920 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி/ 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4100 எம்ஏஎட் பேட்டரி