புதுடெல்லி:
இந்தியாவில் மே மாத வாக்கில் வெளியிடப்பட்ட சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் சியோமியின் Mi.com தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் என சியோமி அறிவித்துள்ளது.
இந்தியாவில் மூன்று வித மெமரி மாடல்களில் கிடைக்கும் ரெட்மி 4 ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரிக்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.6,999, ரூ.8,999 மற்றும் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.
புதிய ரெட்மி 4 ஆஃப்லைன் விற்பனை குறித்து முதலில் தகவல் வெளியிட்ட 91மொபைல்ஸ் அனைத்து மாடல்களின் விலை ஆஃப்லைனில் ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 4 ரூ.7,499, 3 ஜிபி ரேம் மாடல் ரூ.9,499 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவற்றின் விலை ஒவ்வொரு விற்பனையாளரிடம் மாறுபடும் என சியோமி தெரிவித்துள்ளது.
சியோமி ரெட்மி 4 சிறப்பம்சங்கள்:
* 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 4100 எம்ஏஎச் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
சியோமி ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் முன்பதிவு முறையில் விற்பனை செய்யப்படுவது போன்று இன்று மதியம் 12.00 மணிக்கும் விற்பனை நடைபெற்றது. பிளாஷ் முறையில் வாங்காதவர்கள் ரெட்மி 4, ரெட்மி நோட் 4 மற்றும் ரெட்மி 4ஏ ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்து வாங்கிட முடியும்.
சியோமி நிறுவனத்தின் புதிய ஆஃப்லைன் விற்பனை முறையைத் தொடர்ந்து ரெட்மி 4 ஸ்மார்ட்போன்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.