செய்திகள்

சென்னையில் முதல் சியோமி Mi ஹோம் ஸ்டோர் திறக்கப்பட்டது

சியோமி நிறுவனத்தின் Mi ஹோம் ஸ்டோர் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் துவங்கப்பட்டுள்ள ஹோம் ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் சியோமி சாதனங்களை வாங்க முடியும்.

சென்னை: 

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஆன்லைன் மூலம் சாதனங்களை விற்பனை செய்து வந்த நிலையில், ஆஃப்லைன் விற்பனையில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. 

பெங்களூரு மற்றும் டெல்லி நகரங்களில் சியோமி நிறுவனம் Mi ஹோம் ஸ்டோர்களை துவங்கிய நிலையில், சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் சியோமி Mi ஹோம் ஸ்டோர் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐந்தாவது ஹோம் ஸ்டோர் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பெங்களூருவில் மூன்று Mi ஹோம் ஸ்டோர்களும், குர்கிராமில் ஒரு Mi ஹோம் ஸ்டோர் இயங்கி வருகிறது. சியோமி Mi ஹோம் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு சியோமி ஸ்மார்ட்போன், பவர் பேங்க், ஹெட்போன்கள், ஃபிட்னஸ் பேன்ட், ஏர் பியூரிஃபையர்கள் போன்ற சாதனங்களை அனுபவித்து, வாங்க முடியும்.

சமீத்தில் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்ய சியோமி சார்பில் ரூ.999 வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ.599 விலையில் Mi இன்-இயர் ஹெட்போன்கள் இன்று மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சியோமி ஏற்கனவே மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களில் சியோமி Mi ஹோம் ஸ்டோர்களை துவங்க இருப்பதாக அறிவித்திருந்தது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 100 Mi ஹோம் ஸ்டோர்களை துவங்க திட்டமிட்டுள்ளது.