செய்திகள்

4K எச்.டி.ஆர். வசதி கொண்ட சியோமி Mi டிவி 4C அறிமுகம்

சியோமி நிறுவனம் 4K எச்.டி.ஆர். வசதி கொண்ட சியோமி Mi டிவி 4C சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வித அளவுகளில் வெளியிடப்பட்டுள்ள டிவி சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

சியோமி நிறுவனம் Mi டிவி 4C தொலைகாட்சியை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 43 இன்ச் மற்றும் 55 இன்ச் என இரண்டு அளவுகளில் வெளியிடப்பட்டுள்ள புதிய டிவி 9 மில்லிமீட்டர் பெசல்களை கொண்டுள்ளது. புதிய டிவியில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் முன்னதாக சியோமி அறிமுகம் செய்த Mi டிவி 4A மாடலை போன்றே இருக்கிறது.

FHD ரெசல்யூஷன் கொண்ட 4.3-இன்ச் ஸ்கிரீன் கொண்ட சியோமி Mi டிவி 4C மாடல் விலை 1849 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,000 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. 55-இன்ச் ஸ்கிரீன் கொண்ட மாடலில் 4K HDR ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 2649 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி Mi டிவி 4C மாடலின் 43-இன்ச் மாடலில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதன் 55-இன்ச் மாடலில் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புதிய Mi டிவி 4C 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T962 பிராசஸர், Mali 450 GPU வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் இரண்டு மாடல்களிலும் டூயல்-பேண்ட் வைபை மற்றும் ப்ளூடூத் 4.2 வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் டால்பி மற்றும் DTS திரைப்படங்களை பார்க்க எவ்வித கூடுதல் பிளேயரும் தேவைப்படாது. புதிய Mi டிவி 4C இந்தியாவில் வெளியிடப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

SCROLL FOR NEXT