செய்திகள்

ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறும் சியோமி Mi A1

சியோமி நிறுவனத்தின் முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் Mi A1 ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.

மாலை மலர்

சியோமி நிறுவனத்தின் முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போனான சியோமி Mi A1 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் Mi A1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறும் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக சியோமி Mi A1 இருக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ர்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு P அப்டேட் வழங்கப்படுவதையும் உறுதி செய்துள்ளது. ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்டில் பேக்கிரவுண்டு லிமிட்ஸ், பிக்சர்-இன்-பிக்சர், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

சியோமி Mi A1 ஓரியோ அப்டேட் 1107.4 எம்பி அளவு கொண்டிருக்கிறது. இத்துடன் டிசம்பபர் 2017-கான ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு நௌக்கட் 7.12.17 இயங்குதளம் பயன்படுத்துவோர் புதிய 7.12.29 ஓரியோ அப்டேட் பெற முடியும்.


ஓவர் தி ஏர் (OTA) மூலம் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இன்ஸ்டால் செய்வது எப்படி?

இந்த வழிமுறை கொண்டு அப்டேட் பெற வாடிக்கையாளர்கள் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 7.12.19 இயங்குதளம் பயன்படுத்த வேண்டும்.

- அப்டேட் நோட்டிபிகேஷன் பார்த்ததும், திரையில் தெரியும் "Yes, I'm in." ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

- மென்பொருள் முழுமையாக டவுன்லோடு ஆனதும், அதனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

- மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டதும் ஸ்மார்ட்போன் தானாகவே ரீ-ஸ்டார்ட் ஆகும்.

- ஸ்மார்ட்போன் ரீஸ்டார்ட் ஆனதும் அப்டேட் நிறைவுற்றிருக்கும்.