செய்திகள்

மியாமி டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஆஸ்டாபென்கோ

மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ள ஆஸ்டாபென்கோ, அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனை ஸ்டெட்ன்ஸை எதிர்கொள்ள இருக்கிறார்.

மாலை மலர்

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் அமெரிக்காவின் ஸ்டெட்ன்ஸ் 3-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் அசெரன்சாவை (பெலாரஸ்) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடந்த மற்றொரு அரை இறுதியில் லாத் வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோ 7-6 (7-1), 6-3 என்ற நேர்செட் கணக்கில் அமெரிக்காவின் டேனிலே சாலின்சை வீழ்த்தினார்.

நாளை நடக்கும் பெண்கள் இறுதிப் போட்டியில் ஸ்டெட்ன்ஸ்- ஆஸ்டாபென்சோ பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.