உலகிலேயே மிகப்பெரிய முந்திரி மரம் 
செய்திகள்

90 ஆயிரம் சதுர அடி அளவுக்கு நிழல் தரும் உலகின் மிகப்பெரிய மரம் எது தெரியுமா?

உலகிலேயே 90 ஆயிரம் சதுர அடி அளவுக்கு நிழல் தரக்கூடிய மிகப்பெரிய மரம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

மாலை மலர்

பிரேசில் நாட்டில் பார்ப்பதற்கு அதிக மரங்களை கொண்ட பார்க்கை போல, காட்சியளிக்கிறது ஒற்றை முந்திரி மரம். இந்த மரம் கடந்த 1994ம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய முந்திரி மரம் என்பதற்காக கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ளது.

இந்த மரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் முந்திரி பழங்களை வழங்குகிறது. இவற்றை ஜாம், பழச்சாறுகளாகவும் சாப்பிடலாம். 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மரத்தின் கிளைகள் உயரமாக வளராமல், பக்கவாட்டில் வளர்ந்துள்ளது.