இந்தியாவிற்கு பலத்த பாதுகாப்பும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள பக்கபலமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லப்பட்டு வருகிறது. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே நட்பு
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து நட்பு நாடாக விளங்கி வருகிறது. இந்தியாவின் எரிசக்தி தேவையை நிறைவேற்றும் 5 நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது.
ஈரான் போரினால் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. மேலும் இந்த போரில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை விட அமீரகம் மீது ஈரான் குறிவைத்தது அதிகம்.
அமெரிக்கா போரின் போது 500 க்கு மேற்பட்ட ஏவுகணைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரோன்களை யுஏஇ மீது ஈரான் ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
யுஏஇ-யின் ஃபுஜைரா, கோர் ஃபக்கன் ஆகிய துறைமுகங்கள் எரிசக்தியை பூர்த்தி செய்வதால் இந்த தாக்குதகள் போக்குவரத்தை பாதித்துள்ளன.
இந்த நிலையில் தான் ஐக்கிய அரபு இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் கடந்த ஜனவரி மாதம் இந்திய வந்துள்ளபோது பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான படிவத்தில் 6 மாதத்திற்குள் கூட்டாண்மை ஒப்பந்தம் செய்வது குறித்து விருப்பத்துடன் கையெழுத்திட்டார்.
மேலும் வரும் 18 ஆம் தேதி நரேந்திர மோடி நெதர்லாந்து செல்லும் வழியில் அபுதாபி சென்று முந்ரா- ஃபுஜைரா- அகாபா ஆகிய புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளபடும் என கூறப்படுகிறது.
ஜோர்டானின் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் சுரங்கங்களைச் செங்கடலில் உள்ள அகாபா துறைமுகத்துடன் இணைக்க 360 கி.மீ நீள ரெயில் பாதையை அமைக்க 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை அமீரகம் கடந்த மாதம் இறுதி செய்தது. இது இந்தியாவின் உரத்தயாரிப்பிற்கு முக்கியமாவை என்றும் கூறியுள்ளது.
இதனிடையே இந்தியா- அமீரகம் இடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இரு தரப்பு உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.