உலகம்

தப்பு பண்ணிட்டீங்க டிரம்ப்.. வரலாற்றின் தவறான பக்கத்தில் அமெரிக்கா - ஜெலன்ஸ்கி சீற்றம்

டிரம்ப் தனது ஆலோசகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்.

ரஷியாவிடம் டீசல் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.

உக்ரைன் போருக்கு மத்தியில் அமெரிக்கா உட்பட உலகச் சந்தைகளுக்கு ரஷியாவிலிருந்து 300,000 டன்களுக்கும் அதிகமான டீசலை வழங்குவதற்காக ரஷியா மீதான டீசல் ஏற்றுமதி தடைகளை தளர்த்தும் ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

ஈரான் போரினால் உலக சந்தையில் உயர்ந்துள்ள எரிபொருள் விலைகளைக் குறைக்கவும், விநியோகத்தை அதிகரிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று டிரம்ப் இதை நியாயப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பிரிட்டனின் 'பியர்ஸ் மோர்கன் அன்சென்சர்ட்' நேர்காணல் நிகழ்வில் பேசிய ஜெலன்ஸ்கி, அமெரிக்கா வரலாற்றின் 'தவறான பக்கத்தில்' இருப்பதாக தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தவறு

அவர் கூறுகையில், "டிரம்ப் நம்மைத் தவிர்த்து வேறு ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுப்பது வருத்தமளிக்கிறது. குறைந்தபட்சம் அவர் நடுநிலையாக இருக்க வேண்டும், ஆனால் தவறான பக்கத்தில் இருக்கக்கூடாது.

டிரம்ப் தனது ஆலோசகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார். இந்த முடிவு வரலாற்று ரீதியாக தவறானது. இந்த நிகழ்வின் மூலம் ஒரு வலுவான கூட்டாளியை இழந்துவிட்டோம்" என ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்தார்.

எரிசக்தி போர்நிறுத்தம்

அதே நேரத்தில், அக்டோபர் 11 அன்று டிரம்ப் அறிவித்த 'எரிசக்தி போர்நிறுத்தம்' குறித்து பேசிய ஜெலென்ஸ்கி, "பதட்டங்களைக் குறைப்பதற்கான இந்த முன்மொழிவை ஆதரிக்கிறோம், பல நாட்களாக உக்ரைன், ரஷிய எரிசக்தி இலக்குகளை தாக்கவில்லை

இருப்பினும், ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதனால் குறைந்தது 600,000 மக்கள் மின்சாரமின்றி அவதிப்படுகின்றனர்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT