உலகம்

அனுமதியும் கொடுத்து தாக்குதலும் நடத்துறீங்களே?.. ஈரான் கடற்படையிடம் இந்திய கப்பல் ஊழியர் பேசும் ஆடியோ வைரல்

வெளியுறவு அமைச்சகம் டெல்லியில் உள்ள ஈரானியத் தூதரை நேரில் அழைத்துத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியது.

'சன்மார் ஹெரால்டு' மற்றும் 'ஜக் அர்னவ்' ஆகிய இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

நல்வாய்ப்பாக, இந்தத் தாக்குதலில் கப்பல் ஊழியர்களுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை; கப்பல்களுக்கும் பெரிய பாதிப்பு இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், இந்தியக் கப்பல்கள் தங்களின் பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பின.

தாக்குதலின் போது 'சன்மார் ஹெரால்டு' கப்பல் ஊழியர் ஒருவர் ஈரானிய கடற்படையிடம் பேசும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில், "செபா கடற்படை.. செபா கடற்படை.. நீங்கள் தான் எங்களுக்கு அனுமதி கொடுத்தீர்கள். பட்டியலில் இரண்டாவது பெயரே எங்களுடையது தான். ஆனால் இப்போது ஏன் சுடுகிறீர்கள்? தயவுசெய்து எங்களை மீண்டும் செல்ல அனுமதியுங்கள்." என்று அவர் பேசுவது இடம்பெற்றுள்ளது.

நேற்று வெளியுறவு அமைச்சகம் டெல்லியில் உள்ள ஈரானியத் தூதரை நேரில் அழைத்துத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பாதையை வழங்குவதாக ஈரான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.