உலகம்

உலகின் மிகப்பெரிய கிரிப்டோ திருட்டு: பைனான்ஸ் நிறுவனத்தில் சைபர் தாக்குதல் மூலம் ரூ.60,000 கோடி அபேஸ்

இந்தியாவில் உள்ள கிரிப்டோ முதலீட்டாளர்களை இந்தச் சம்பவம் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சைபர் தாக்குதலில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிவர்த்தனை தளமான பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.60,000 கோடி) கிரிப்டோகரன்சிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சைபர் தாக்குதலில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிவர்த்தனை தளமான பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.60,000 கோடி) கிரிப்டோகரன்சிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கிரிப்டோ வரலாற்றில் இதுவே மிகப்பெரிய டிஜிட்டல் சொத்து திருட்டு என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 29ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்த துணிகரத் தாக்குதல், வெறும் 20 நிமிடங்களுக்குள் அரங்கேறியுள்ளது.

ஹேக்கர்களின் கைவரிசை எப்படி இருந்தது?

பைனான்ஸ் நிறுவனத்தின் ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மடிக்கணினி ஹேக்கர்களால் முடக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. பிட்கோயின், எதிரியம், சொலானா உள்ளிட்ட பல்வேறு பிளாக்செயின் நெட்வொர்க்குகளில் இருந்து இந்தத் தொகை ஒரே வளைவில் வெளியேற்றப்பட்டுள்ளது. எனினும், பயனர்களின் தனிப்பட்ட சாவிகள் கசியவில்லை என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர் குழுவினர் இருக்கக்கூடும் என பிளாக்செயின் பாதுகாப்பு நிறுவனங்கள் சந்தேகிக்கின்றன.

கொள்ளையடிக்கப்பட்ட மொத்தத் தொகையில் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை டெதர் மற்றும் சர்க்கிள் போன்ற ஸ்டேபிள்காயின் நிறுவனங்களின் உதவியுடன் பைனான்ஸ் உடனடியாக முடக்கியது. பயனர்களின் முதலீடுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவசரப் பாதுகாப்பு நிதியம் மற்றும் நிறுவனத்தின் சொந்த மூலதனத்திலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்றும் பைனான்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் டெங் உறுதியளித்துள்ளார்.

இந்திய முதலீட்டாளர்கள்

இந்தியாவில் உள்ள கிரிப்டோ முதலீட்டாளர்களை இந்தச் சம்பவம் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு பைனான்ஸ் நிறுவனம் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கிய நிலையில், பல இந்தியர்கள் இதில் முதலீடு செய்துள்ளனர். கிரிப்டோ பரிவர்த்தனை தளங்கள் இதுபோன்ற சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது, பயனர்கள் தங்கள் பணத்தை உடனடியாக எடுக்க முடியாமல் தற்காலிகத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்திய வங்கிகளைப் போல கிரிப்டோ முதலீடுகளுக்கு எந்தவிதமான சட்டப்பூர்வ வைப்புத்தொகை காப்பீடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கிரிப்டோ சந்தையில் பிட்கோயின் விலை சரிவைச் சந்தித்துள்ளது. பயனர்கள் தங்களின் ஒட்டுமொத்த முதலீடுகளையும் ஒரே பரிவர்த்தனை தளத்தில் வைத்திருக்காமல் பாதுகாப்பான சுய-கஸ்டடி வாலெட்டுகளை பயன்படுத்துவது நலம் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

SCROLL FOR NEXT