அமெரிக்கா ஈரான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டது. 8 மாதங்களாக நீடித்து வரும் இந்த போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டு உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனிடையே அமெரிக்கா- இஸ்ரேல் படைகளிடம் இருந்து, உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் ராணுவம் வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளதாக அந்த நாட்டின் உச்சத் தலைவர் அயதுல்லா மொஜ்தாபா காமேனி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்," நமது வீரர்களின் பலத்த அடியைத் தாங்க முடியாமல் எதிரிப்படைகள் ஹார்முஸ் பகுதியை விட்டு விரட்டியடிக்கப்பட்டு வெற்றிக்கரமாக மீட்டுள்ளோம்" என்று அதிரடியாக முழங்கியுள்ளார்.
ஈரானுடனான சமரச பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பொதுவெளியில் நிராகரித்தாலும், புதிய நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர கத்தார் உள்ளிட்ட சர்வதேச மத்தியஸ்தர்கள் மீண்டும் தீவிர திரைமறைவுப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர்.
பொருளாதாரப் பாதிப்பு மற்றும் சர்வதேச எரிபொருள் விலை உயர்வைக் குறைக்க இரு நாடுகளையும் வளைக்க மத்தியஸ்தர்கள் புதிய வரைவுத் திட்டங்களை நகர்த்தி வருகின்றனர்.
இதனால் விரைவில் சுமுக ஒப்பந்தம் எட்டப்படலாம் என அந்த நாடுகளின் வெளியறவுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.