உலகம்

Viral Video: "எதிரிகள் தென்பட்டால் இது உங்களுக்கு பயன்படும்.." வட கொரிய அதிபருக்கு துப்பாக்கி பரிசளித்த பெலாரஸ் அதிபர்

இருநாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடு பெலாரஸ். இதன் அதிபர் லுகாஷென்கோ முதன்முறையாக வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று வட கொரிய தலைநகர் பியாங்காங்கில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதித்தார். இருநாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்த சந்திப்பின்போது பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ, கிம் ஜாங் உன்-க்கு நட்பின் நிமித்தமாக ரைபிள் துப்பாக்கி ஒன்றை பரிசளித்துள்ளார்.

துப்பாக்கியை வழங்கும்போது, "எதிரிகள் தென்பட்டால் இது உங்களுக்குப் பயன்படும்" என்று லுகாஷென்கோ கிமிடம் வேடிக்கையாகக் கூறினார். இதைக் கேட்டு கிம் ஜாங் உன் சிரித்தார்.

துப்பாக்கியை பெற்றுக்கொண்ட பெற்றுக்கொண்ட கிம், அதைச் சுடுவது போலச் சைகை செய்து நன்றி தெரிவித்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பதிலுக்கு லுகாஷென்கோவின் உருவம் பொறிக்கப்பட்ட கடல் சிப்பிகளால் அலங்கரிக்கப்பட்ட பூ ஜாடியை கிம் ஜாங் உன் அவருக்கு பரிசளித்தார்.

பயணம் முடிந்து கிளம்பிய லுகாஷென்கோவை, கிம் ஜாங் உன் நேரில் விமான நிலையம் வரை சென்று கட்டித்தழுவி வழியனுப்பி வைத்தார்.

உக்ரைன் போரில் வட கொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளும் ரஷியாவை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.