டிரம்ப் 
உலகம்

வெனிசுலாவில் நிலநடுக்கம்- உதவிக்கரம் நீட்டுமா அமெரிக்கா?

வெனிசுலாவில் நாடு முழுவதும் பேரிடர்கால அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கரீபியன் கடலில் அமைந்துள்ள தென் அமெரிக்க தீவு நாடு வெனிசுலா. இங்கு 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுவரை 10,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் அச்சம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வெனிசுலாவில் நாடு முழுவதும் பேரிடர்கால அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுட்டுள்ளார். அவர் கூறியதாவது,

வெனிசுலாவை தாக்கிய இரண்டு மாபெரும் நிலநடுக்கங்களும் பெரிய அளவில் மக்களை பாத்திதுள்ளது. மேலும் அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கா உதவத் தயாராகவும், விருப்பத்துடனும், திறனுடனும் இருக்கிறது. நமது அரசாங்கத்தின் அனைத்து முகமைகளும் விரைவாகச் செயல்படத் தயாராக இருக்குமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.