உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 2 சிறுவர்கள் உயிரிழப்பு - 5 பேர் காயம்

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 சிறுவர்கள் பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.