ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்தப் போரை பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து இருதரப்பில் இருந்தும் மாறுபட்ட தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ஈரான் மத்திய கிழக்கை கைப்பற்ற முயன்றது. மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் கையில் அணு ஆயுதம் இருக்கக்கூடாது. போர் நடந்து கொண்டிருந்தபோது நேட்டோ உதவாததால் நான் மிகுந்த அதிருப்தியில் உள்ளேன். ஈரான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. ஈரான் உடனான போர் தற்போது முடிந்து விட்டது என தெரிவித்தார்.