உலகம்

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்.. 2 விமானிகள் மீட்பு - பதிலடி தரப்படும் என டிரம்ப் எச்சரிக்கை

ஒரு அப்பாச்சி ஹெலிகாப்டரை அமெரிக்கா இழப்பது இதுவே முதல் முறையாகும்.

மத்திய கிழக்கு பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் கடற்படுத்தியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் AH-64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் நேற்று கடலில் விழுந்தது.

இந்நிலையில் ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், விமானத்தில் இருந்த 2 விமானிகள் மீட்கப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு ஈரான் கண்டிப்பாக பதிலடி கொடுக்கும் எனவரும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக போரை தொடங்கியதிலிருந்து, ஒரு அப்பாச்சி ஹெலிகாப்டரை அமெரிக்கா இழப்பது இதுவே முதல் முறையாகும். இவை ரோந்து பணிக்கு மட்டுமே பிரத்யேகமாக பயன்படுத்தப்படுபவை ஆகும்.

ஈரானுடனான பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க அழுத்தம் தரும் விதமாக ஈரானை சுற்றிய பகுதிகளில் அமெரிக்கா தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் உறுதியாகும் என டிரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.