அமெரிக்க ராணுவ விமானம்
உலகம்

மாஸ்கோவில் தரையிறங்கிய அமெரிக்க ராணுவ விமானம்: ரஷியா சொல்வது என்ன?

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா விமானம் தரையிறங்கியுள்ளது.

உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டை 4 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. ரஷியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்து வருகிறது. அவர்களிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா பெரும்பாலான நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். என்றாலும் புதின் அதைப்பற்றி கவலையில்லாமல் சண்டையிட்டு வருகிறார்.

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை டிரான்ஸ்போர்ட் விமானம் ரஷியாவில் தரையிறங்கியுள்ளது. இதில் என்ன விசேகம் என்றால், ரஷியா இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த விமானம் C-17A Globemaster III என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் அமெரிக்காவில் இருந்து ரஷியாவுக்கு நேரடியாக வரவில்லை.

லிட்வியாவில் இருந்து ரஷியாவுக்கு சென்றது

முதலில் அமெரிக்காவில் உள்ள கேம்ப் ஸ்பிரிங்ஸ் என்ற ஆண்ட்ரூவ்ஸ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு லிட்வியாவில் உள்ள ரிகா என்ற விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளது. ஆண்ட்ரூவ் விமானப்படைத் தளம் அமெரிக்க அதிபரின் ஏர் விமானப்படை தளத்தில் முக்கியமானதாகும்.

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம், நேற்று முன்தினம் லிட்வியாவில் உள்ள ரிகா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இங்கிருந்து ரஷியாவில் உள்ள வ்னுகோவா விமான நிலையம் வந்தடைந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த விமானப்படை விமானம் அதிகாரிகள், ராணுவ தளவாடங்கள், பல்வேறு சரக்குகளுடன் நீண்ட தூரம் பறக்கக் கூடியது ஆகும்.