உலகம்

விமான பணிப்பெண்ணை கடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் பிரபல நடிகை கைது

பயணி உடல்ரீதியாக துன்புறுத்தியதாக வந்த புகார்களை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூ யார்க் நகரத்திற்கு சென்ற விமானத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் வாக்குவாதத்தில் இரண்டு விமான பணியாளர்கள் காயமடைந்ததை தொடர்ந்து, அமெரிக்க நடிகை செல்மா பிளேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

'லீகலி ப்ளாண்ட்' மற்றும் 'க்ரூயல் இன்டென்ஷன்ஸ்' படங்களில் நடித்த நடிகை செல்மா, ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, ஒரு பயணி உடல்ரீதியாக துன்புறுத்தியதாக வந்த புகார்களை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டார்.

மருத்துவ அவசர நிலை:

54 வயதான பிளேர், காயமடைந்த இரண்டு விமான பணிப்பெண்களில் ஒருவருடன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

"செல்மாவுக்கு ஏற்பட்ட மருத்துவ அவசர நிலையே, கூறப்படும் இந்த நடத்தைக்கு வழிவகுத்தது," என்று பிளேயரின் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

உடனடி மருத்துவ சிகிச்சை:

தரையிறங்கியதும் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது, தற்போது அவர் சீரான நிலையில் உள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வரும் எஃப்.பி.ஐ, இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாக பதில் அளிக்கவில்லை.

"எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எப்போதும் முதன்மையானது என்பதால், ஒழுங்கற்ற அல்லது சட்டவிரோத நடத்தையை விமான நிறுவனம் சற்றும் பொறுத்துக்கொள்ளாது" என்று டெல்டா செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT