உலகம்

அமெரிக்காவில் 250வது சுதந்திர தினக் கொண்டாட்டம்! ரெட் ஆரோஸ் குழு பங்கேற்பு

அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ரெட் ஆரோஸ் குழுவினர் இந்த கோடையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

ரெட் ஆரோஸ் என்று பரவலாக அறியப்படும் ராயல் ஏர் ஃபோர்ஸ் ஏரோபேட்டிக் குழுவு, கடந்த ஆண்டு அதிபர் டிரம்ப் இங்கிலாந்துக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது வானில் அணிவகுப்பு நடத்தியது.

மேலும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் படைகள் பல தலைமுறைகளாகச் சிறப்பாக இணைந்து பணியாற்றி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, இணையற்ற நம்பிக்கை, தொழில்முறை மற்றும் பகிரப்பட்ட நட்பு போன்றவற்றை மேலும் வலுப்படுத்தவும் உறவுகளைச் சீர்செய்யவும் நோக்கமாக கொண்டுள்ளதது .

துப்பாக்கி முனையில் அமெரிக்கா பிரிட்டிஷ் ஆட்சியை நிராகரித்து இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான நிலையில், தற்போது அமெரிக்கா தனது 250வந்து சுதந்திர தினத்தை கொண்டாடிவருகிறது .

இந்நிலையில் ஆயிரக்கணக்கானோர் திரளாகக் கூடும் சுதந்திர தினமான ஜூலை 4 அன்று, நியூயார்க் நகரின் மீது நடைபெறும் ஒரு பெரிய சர்வதேச வானூர்தி அணிவகுப்பில் ரெட் ஆரோஸ் குழு பங்கேற்க உள்ளது. அதே நேரத்தில், நியூ ஆர்லியன்ஸ் மற்றும் நியூயார்க்கில் நடைபெறும் கொண்டாட்டங்களில் ராயல் நேவி கப்பல்களும் கலந்துகொள்ளவுள்ளது.

கடந்த மாதம் மன்னர் சார்லஸ் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தைத் தொடர்ந்து,உறவின் அடிப்படையில் அமெரிக்காவின் கொண்டாட்டத்தில் இக்குழு பங்கேற்கவுள்ளது.