உலகம்

மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - 10 பேர் படுகொலை

பிரமிடுகளில் ஒன்றின் உச்சியில் ஏறிய ஆயுதமேந்திய நபர் ஒருவர், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று, மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் உள்ள Tehuitzingo நகரில் உள்ள வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 10 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அவர்களில் அறுவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடந்த்து வருகிறது.

மத்திய மெக்சிகோ பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம், ஹுஹுயெட்லான் எல் கிராண்டே பகுதியில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சில தினங்கள் முன் மெக்சிகோவின் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தியோதிஹுவாகன் பிரமிடுகளில் ஒன்றின் உச்சியில் ஏறிய ஆயுதமேந்திய நபர் ஒருவர், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் கனடாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். பின்னர் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.