அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷியாவுடன் டீசல் ஏற்றுமதி மீதானை தடைகளை நீக்கியதை தொடர்ந்து, தற்போது உக்ரைனுக்கு ஒரு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த பனிப்போர் 1991-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
ரஷியாவிற்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் வகையில், ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் சட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
மேலும் ரஷியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கும் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுடன் அமெரிக்கா நடத்தி வரும் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையானது டிரம்ப் நிர்வாகத்தின் மீது அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷியாவுடன் வர்த்தக் ஒப்பந்தம் செய்வதற்கு முன்வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ரஷிய அதிபர் புதின், சமீபத்தில் அமெரிக்காவுக்கு வருகை தந்து டிரம்பை சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு, அமெரிக்கா மற்றும் உலக சந்தைகளுக்கு உடனடியாக 3,00,000 டன்களுக்கும் அதிகமான டீசல் எரிபொருளை ரஷியா வழங்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதை உறுதிபடுத்தும் விதமாக, அமெரிக்கா மற்றும் உலக சந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களை வழங்க தயாராக உள்ளதாக ரஷியா தெரிவித்தது.
இதையடுத்து ரஷியா மற்றும் அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்திற்கு கண்டனம் தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “டீசல் ஏற்றுமதி மீதான தடைகள் நீக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இன்று உக்ரைன் குடியிருப்புகள் மீது ரஷியா ஐந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில், ரஷியாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியால் எட்ட முடியவில்லை என்று சுட்டிக்காட்டிய டிரம்ப், உக்ரைனுக்கு ஒரு புதிய அதிபர் தேவை என்று கூறியுள்ளார்.
மேலும் வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய தலைவரை உக்ரைன் நியமிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
ஏனோ தெரியவில்லை, ஜெலன்ஸ்கி அதை ஒருபோதும் செய்வதில்லை. அந்த போர் ஒருபோதும் தொடங்கியிருக்காது.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான அந்த போர் தொடங்குவதற்கு எந்த காரணமும் இல்லை. அது திறமையின்மையால் தொடங்கியது.
ஜெலன்ஸ்கி தனது நாட்டின் 30% பகுதியை இழக்கச் செய்தார், மேலும் இந்த போரில் இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அது ஒருபோதும் தொடங்கியிருக்கவே கூடாத ஒரு போர். மேலும், உக்ரைனுக்கு ஒரு புதிய அதிபர் தேவை என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினார்.