உலகம்

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் டிரோன்களை உக்ரைன் படைகள் வீழ்த்தின: ஜெலன்ஸ்கி

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நாடுகளில் உக்ரைன் படைகள் டிரோன்களை சுட்டு வீழ்த்தும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

அத்துடன் சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மீது ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஷாஹேத் என்ற டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தியது. இதை வளைகுடா நாடுகள் உள்ள வான்பாதுகாப்பு சிஸ்டம் முறியடித்தது. என்றாலும் ஒன்றிரண்டு டிரோன்களால் சேதங்கள் ஏற்பட்டது.

இந்த நிலையில் மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள பல்வேறு நாடுகளில் உக்ரைன் படைகள் ஈரானி் ஷாஹேத் டிரோன்களை சுட்டு வீழ்த்திய என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷியா உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்திய அதேவகை டிரோன்களை முறியடிக்க பார்ட்னர் நாடுகளுக்கு உதவும் வகையில் உக்ரைன் இதை செய்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு, போர்க்களத்தில் சோதிக்கப்பட்ட சிஸ்டத்தால் இதை செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.