உலகம்

உகாண்டாவில் இந்தியர்கள் உள்பட 231 வெளிநாட்டினர் கைது

கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்களில் பலர், வேலைவாய்ப்பு ஆசை காட்டி கடத்தி வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உகாண்டாவின் வடக்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் வசித்து வருவதாக அந்நாட்டு உளவுத்துறை அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் அதிகாரிகள் நாட்டின் வடக்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக வசித்து வருபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 62 கைது செய்தனர்.

தலைநகர் கம்பாலா அருகில் உள்ள ஒரு வளாகத்தில் வெளிநாட்டினர் தங்கிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். வெளிநாட்டினர் தங்களுக்கென ஒரு கட்டுப்பாட்டுடன், வெளியாட்கள் உள்ளே எளிதில் நுழைய முடியாத வகையில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த வளாகத்தை சுற்றி வளைத்து 169 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், கானா, மியான்மர், எத்தியோப்பியா, இலங்கை, கம்போடியா, மலேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் 169 பேரில் 36 பேர் பெண்கள் ஆவார்கள்.

வெளிநாட்டைச் சேர்ந்த பலர் முறையாக ஆவணங்கள் இல்லாமல் வசித்து வருவதாகவும், அவர்களில் சிலருக்கு பாஸ்போர்ட் கூட இல்லை என்றும் உளவுத்துறை தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர், தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஆட்கடத்தல் செய்யப்பட்டதாக தெரிவித்தாகவும் அதிகாரிகள் எதிரிவித்துள்ளனர். சிலர் இணைய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் எனத் தெரிவித்தனர்.