உலகம்

UAE Iran Attack | ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்கப்படலாம்: துபாய் மக்களுக்கு செல்போன் மூலம் SOS எச்சரிக்கை..!

ஈரான் துபாய் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் பொதுமக்களுக்கு செல்போன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் ஈரன் தாக்குதல் நடத்தி வருகிறது. துபாய் விமான நிலையம், பிரபல ஹோட்டல்கள் உள்ளிட்டவைகளை தாக்கி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என துபாயில் வசித்து வரும் மக்களுக்கு செல்போன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.