உலகம்

தைவானை அச்சுறுத்தும் 'சாம்பி' புயல்: 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பசிபிக் கடலில் உருவான 'சாம்பி' சக்திவாய்ந்த புயல் தைவான் நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக அங்கு பலத்த சூறாவளிக் காற்றுடன், கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவான் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான மற்றும் மலைப் பகுதிகளில் வசித்த 1,300-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புயல் காரணமாக தைவானில் 260-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும், 660-க்கும் அதிகமான சர்வதேச விமானங்களும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 90-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தைவானை கடந்து இந்த புயல் ஜப்பான் நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT