உலகம்

இந்தியாவை நோக்கி வந்த 2 கச்சா எண்ணெய் கப்பல்களை திருப்பி அனுப்பிய ஹவுதி அமைப்பினர்

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில், இந்த நிகழ்வு மேலும் பற்றாக்குறையை அதிகரித்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி போராளிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் சீனாவுக்கான கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற மூன்று சவுதி எண்ணெய் கப்பல்கள், ஏமன் கடற்கரையை எதிர்கொள்ளாமல் திரும்பி சென்றன.

சூயஸ் கால்வாயை நோக்கிச் சென்று கொண்டிருந்த சின் லாங் யாங், ரோடோஸ் மற்றும் அமேசான் ஆகிய மூன்று எண்ணெய் கப்பல்கள், ஹீதி அமைப்பினர் எச்சரிக்கையை தொடர்ந்து திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்கனவே நெருக்கடியில் உள்ள உலகளாவிய எரிசக்தி சந்தைகளில், இந்த நிகழ்வு மேலும் பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடும் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தின் போது, ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர், சவூதி அரேபியாவுக்கு எதிராகக் கடற்படை முற்றுகையை அறிவித்தனர். இந்த நடவடிக்கை, வளைகுடாப் பகுதிக்கு வெளியே உள்ள உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்திற்கான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

ஹீதி கிளர்ச்சிக் குழு, கப்பல் நிறுவனங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், சவூதி அரேபிய துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது என எச்சரித்ததோடு, அத்தகைய செயல்பாடு எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு வழிவகுக்கலாம் என்று எச்சரித்தது.

ஹூதி அமைப்பினர்கள், செங்கடலின் முகத்துவாரத்தில் உள்ள பாப் அல்-மண்டேப் நீரிணையின் கடற்கரை உட்பட வடக்கு ஏமனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

கண்ணீர்க் கதவு என்றும் அழைக்கப்படும் இந்த நீரிணை, செங்கடலை ஏடன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது.

சவூதி அரேபிய துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் செங்கடல் வழியாகப் பயணிப்பதை மறுபரிசீலனை செய்யவும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த எச்சரிக்கையை உணராமல், நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்கள் அதிக ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் ஹவுதி அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் புதிதாக ஏற்பட்டுள்ள எச்சரிக்கை காரணமாக, ஆசியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு வாரக்கணக்கில் கூடுதல் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.