உலகம்

உலகிற்கு இந்தியா அளித்த கொடை தமிழ் மொழி - மலேசியாவில் பிரதமர் மோடி பேச்சு

மலேசியாவில் UPI சேவை விரைவில் தொடங்கும்.விரைவில் ஒரு திருவள்ளுவர் மையமும் அமைக்கப்படும்.

அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கோலாலம்பூரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றினார்.

நிகழ்வில் அவர் பேசியதாவது, நம்பிக்கை தான் இந்தியாவின் மிகப்பெரிய கரன்சியாக மாறியுள்ளது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன. இது உலகம் நம் நாட்டின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் குறிக்கிறது.

இந்தியாவின் வெற்றி மலேசியா மற்றும் ஆசியாவிற்கும் ஒரு வெற்றி. உலகில் இந்திய வம்சாவளியினர் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு மலேசியா. இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு புலம்பெயர்ந்தோர் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வலுவான பாலமாக நிற்கிறார்கள். 

குறிப்பாக, தமிழ் சமூகம் இங்கு பல நூற்றாண்டுகளாக தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தமிழ் மொழி, உலகிற்கு இந்தியா அளித்த கொடை. தமிழ் இலக்கியம் இறவா தன்மை கொண்டது. தமிழ் கலரச்சாரம் உலகலவியது. தமிழர்கள் தங்கள் திறமைகளால் மனித குலத்துக்கு சேவை செய்கின்றனர்.

மலாயா பல்கலைக்கழகத்தில் ஒரு திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த விரைவில் ஒரு திருவள்ளுவர் மையமும் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக பிரதமர் மோடி மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இப்போது மலேசியாவிலும் இந்தியாவின் UPI பணபரிமாற்ற முறையை தொடங்க முடிவு எட்டப்பட்டது. விரைவில் மலேசியாவில் UPI சேவைகள் தொடங்கும் என மோடி தெரிவித்துள்ளார். 

A grand celebration of Indian culture in Malaysia! A highlight of the community programme in Kuala Lumpur was a dance performance which has set a record in Malaysia. Congratulations to all those who took part in the dance performance. pic.twitter.com/BbXhNKuRez