அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 7-ம் தேதி இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரண்டு வார போர் நிறுத்தத்தின்போது நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்படிக்கை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அதன்பின் நேரடி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
நாளையுடன் இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம் நிறைவடைகிறது. இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு ஒப்பந்தத்தை எட்ட போதுமான அவகாசம் அளிக்கும் வகையில், ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பீர்களா என்று கேட்கப்பட்டபோது, "உண்மையில், நான் அதை செய்ய விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், "அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: ஈரான் தன்னை மிகச் சிறந்த நிலையில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டால், மீண்டும் ஒரு வலிமையான தேசமாகவும், மீண்டும் ஒரு அற்புதமான தேசமாகவும் தங்களை மாற்றிக்கொள்ள முடியும். ஒப்பந்தம் ஏதுமின்றி நாளை போர்நிறுத்தம் முடிவடைந்தால், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கத் தயாராகுவோம்.
நான் குண்டு வீசுவேன் என்றே எதிர்பார்க்கிறேன். ஏனெனில், அந்த அணுகுமுறையுடன் களமிறங்குவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்" என்றார்.