உலகம்

Iran War | மிக விரைவில் ஈரானை விட்டு வெளியேறுவோம் - அதிபர் டிரம்ப்

நாங்கள் அதை மிக விரைவில் செய்வோம் என்று டிரம்ப் பதிலளித்தார்.

அமெரிக்கப் படைகள் ஈரானில் தங்கள் நடவடிக்கைகளை "மிக விரைவில்" முடிவுக்கு கொண்டுவரும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். தனது நிர்வாகம் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்துகொண்டே ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், இது இரண்டு முதல் மூன்று வார கால அவகாசத்தை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று போர் தொடங்கியதில் இருந்து நிலவும் அதிக எரிபொருள் விலைகளின் தாக்கம் குறித்து வெள்ளை மாளிகை நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்டபோது பதிலளித்த அதிபர் டிரம்ப், "நான் செய்ய வேண்டியதெல்லாம் ஈரானை விட்டு வெளியேறுவதுதான், நாங்கள் அதை மிக விரைவில் செய்வோம், அவர்கள் சரிந்து விழுவார்கள்."

"நாங்கள் வேலையை முடித்துக் கொண்டிருக்கிறோம், இன்னும் இரண்டு வாரங்களில் அல்லது ஓரிரு நாட்களில் இந்த வேலையை முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன். நீண்ட காலத்திற்குஅவர்களால் அணு ஆயுதத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்று நாங்கள் உணரும்போது, நாங்கள் வெளியேறிவிடுவோம்," என்று அவர் கூறினார்," என்று அவர் கூறினார்.