நாங்கள் ரஷியா மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். அதை (போர் நிறுத்தம்) நாங்கள் செய்து முடிப்போம். மக்கள் நினைப்பதை விட இது மிக விரைவாக நடக்கும் என்று நான் நினைக்கிறேன்.
வணிக கப்பல் போக்குவரத்தின் மீதான தாக்குதல்களை நிறுத்தி, தங்கள் அணுசக்தி லட்சியங்களை கைவிட்டு, பயங்கரவாதத்திற்கான ஆதரவை நிறுத்திக்கொள்ளும் வரை, ஈரானை முழுமையான பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதை அமல்படுத்துவதில் எங்களுடன் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் நான் அழைப்பு விடுத்தேன்.
அந்த பயங்கரவாத ஆட்சி மோசமாக நடந்து கொள்வதற்கு காரணம் அவர்கள் வலிமையுடனும் தன்னம்பிக்கையுடனும் இருப்பது அல்ல. மாறாக, அவர்கள் பலவீனமாகவும் விரக்தியிலும் இருப்பதே ஆகும்.
அவர்கள் மத்திய கிழக்கின் அடாவடி சக்தியாக திகழ்ந்தனர். ஆனால், இனி அவர்கள் அந்த அடாவடி சக்தியாக இல்லை. காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வந்து, ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றினோம்.
மிகச் சிறந்த மனிதரான பாகிஸ்தான் பிரதமர், 30 மில்லியன் உயிர்களையும், அநேகமாக அதைவிட அதிகமான உயிர்களையும் காப்பாற்றியதில் டொனால்ட் ட்ரம்ப் தான் பொறுப்பானவர் என்று கூறினார்.
அமெரிக்க கடற்படை அண்மையில் ஹார்முஸ் நீரிணை வழியாக நூறு கோடி பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெயைப் பாதுகாப்பாக கொண்டு சென்றுள்ளது. மேலும், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவிற்குக் கூடுதல் எண்ணெய் தற்போது அப்பாதையின் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
நாங்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும் முறையே 22, 25, 30, 32 மற்றும் 37 கப்பல்களை வெளியே அனுப்புகிறோம். ஈரான் அரசு இந்த ஆண்டில் தனது சொந்த குடிமக்கள் 72,000-க்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளது. அதேவேளையில், தெஹ்ரான் அணு ஆயுதத்தை கைப்பற்றினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.