உலகம்

என்னை பதவி நீக்கம் செய்தால் ஜனநாயக கட்சியை அழித்து விடுவேன்- டிரம்ப் காட்டம்

ஜனநாயக கட்சிக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அமெரிக்க இடைக்கால தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியிடம் பாராளுமன்றத்தின் முழு கட்டுப்பாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்றுவிடும். இந்தநிலையில் ஜனநாயக கட்சிக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர்,"ஜனநாயக கட்சியினர் என்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தால், அது அவர்களின் கட்சியை அழித்துவிடும். என்னை பதவி நீக்கம் செய்ய எந்தக் காரணமும் இல்லை. பதவி நீக்க நடவடிக்கை குறித்து நான் சிறிது கூட கவலைப்படவில்லை" என்றார்.

முன்னதாக ஜனநாயக கட்சியின் திட்டங்களைத் தடுக்க அதிபருக்கான வீட்டோ மறுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவேன். அதேசமயம் அடுத்த 2 ஆண்டுகள் எதையும் செய்ய விடாமல், எல்லா வற்றிற்கும் வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்திக்கொண்டு சும்மா அமர்ந்திருக்க நான் விரும்பவில்லை என்றார்.

SCROLL FOR NEXT