அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 3 நாள் பயணமாக சீனா சென்றிருந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங் - டொனால்டு டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தையின் போது தைவான் விவகாரம் முக்கியத்தும் பெற்றது.
இருவரின் சந்திப்பின் போது, சீன அதிபர் ஜி ஜின் பிங், டிரம்பிடம் "சீனா - அமெரிக்கா இடையிலான உறவில் தைவான் என்பது மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான விஷயம். இதை சரியாக கையாண்டால் மட்டுமே இரு நாட்டு உறவு நீடிக்கும். தவறும்பட்சத்தில், இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகிவிடும். இது ஒட்டுமொத்த உறவையும் பேராபத்தில் தள்ளும்" எனக் கூறியிருந்தார்.
தைவானுக்கு பல பில்லியன் கணக்கில் ஆயுதம் தொகுப்பு வழங்க டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியிருந்தது. ஜி ஜின்பிங்கின் இந்த நேரடியாக எச்சரிக்கைக்குப் பிறகு, அமெரிக்கா ஆயுத விற்பனை திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் தைவானுக்கு ஆயுத தொகுப்பு வழங்கும் முடிவை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா? இல்லையா? என்பதை குறித்து இன்னும் தீர்மானிக்கவில்ல என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தைவான் தனி சுதந்திர நாடாக விளங்கி வருகிறது. ஆனால், அது தங்களுடைய பிராந்தியம் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.