உலகம்

Donald Trump | வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற காலக்கெடு விதித்த டிரம்ப்... மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல்!

ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார் .

ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் உரையாடியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். மேலும், வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியம் தனது தரப்பை நிறைவேற்றுவதற்கு ஜூலை 4 வரை அவகாசம் வழங்கப்படும் என்றும், ஒரவேளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அமெரிக்க வரிகளை மிக அதிகமாக உயர்த்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

"ஸ்காட்லாந்தின் டர்ன்பெர்ரியில் நாம் ஒப்புக்கொண்ட, இதுவரை இல்லாத மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில், ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் தரப்பை நிறைவேற்றுவதற்காக நான் பொறுமையாகக் காத்திருக்கிறேன்!" என்று ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார் .

ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும், ஒப்பந்தத்தின்படி தங்கள் சுங்க வரிகளை பூஜ்ஜியத்திற்குக் குறைக்கும் என்றும் ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டது! நமது நாட்டின் 250வது பிறந்தநாள் வரை அவருக்கு அவகாசம் அளிக்க நான் ஏற்றுக்கொண்டேன், இல்லையென்றால், துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் சுங்க வரிகள் உடனடியாக மிக உயர்ந்த நிலைகளுக்கு உயர்ந்துவிடும்.

கடந்த ஜூலை மாதம் ஸ்காட்லாந்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் கடைப்பிடிக்காததால், அந்நாட்டின் கார்கள் மற்றும் லாரிகள் மீதான வரியை தற்போதுள்ள 15%-இலிருந்து இந்த வாரம் 25%-ஆக உயர்த்தப்போவதாக டிரம்ப் வெள்ளிக்கிழமை அச்சுறுத்தியிருந்தார்.

இரு தலைவர்களும் ஈரான் குறித்தும் விவாதித்ததாகவும், தெஹ்ரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் உடன்பட்டதாகவும் டிரம்ப் கூறினார்.