அதிபர் டிரம்ப் 
உலகம்

அமெரிக்காவில் 8 ஆயிரம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

தொடக்கத்தில் சுமார் 50 ஆயிரம் ஊழியர்கள் (மொத்த பணியாளர்களில் 2 சதவீதம் பேர்) நீக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நேற்று ஒரு புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 8 ஆயிரம் உயர்நிலை மத்திய அரசு ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்ய வழிவகை செய்யும்.

வெள்ளை மாளிகை மற்றும் பணியாளர் மேலாண்மை அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, அரசின் கொள்கைகளைச் செயல்படுத்தத் தவறும் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்ய அரசுத் துறைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதித சம்பளம், சம்பளத்துக்கு இணையான வேலை செய்யாமல் இருப்பவர்கள், தேவைக்கு அதிகமான பணியாட்கள் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. தொடக்கத்தில் சுமார் 50 ஆயிரம் ஊழியர்கள் (மொத்த பணியாளர்களில் 2 சதவீதம் பேர்) நீக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இறுதி உத்தரவில் இந்த எண்ணிக்கை 8 ஆயிரம் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT