வேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப புரட்சிக்கு மிகவும் கம்பீரமான மற்றும் சரியான பெயரை தேர்வு செய்ய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு என்ற சொல் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பொருத்தமானதாக இல்லை என்றும், அதற்கு புதிய மற்றும் நேர்த்தியான பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் மற்றும் 'எக்ஸ்' தளங்களில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "செயற்கை நுண்ணறிவு" என்ற வார்த்தை துல்லியமற்றதாகவும், நேர்த்தியற்றதாகவும் பலரால் கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். வேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப புரட்சிக்கு மிகவும் கம்பீரமான மற்றும் சரியான பெயரை தேர்வு செய்ய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏஐ-க்கு பதிலாக மாற்றுப் பெயர்களை பரிந்துரைத்து டிரம்ப் இணையதளத்தில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பைத் தொடங்கியுள்ளார். அதில் அவர் முன்வைத்துள்ள மூன்று பெயர்கள்:
* சுப்பீரியர் இன்டெலிஜென்ஸ்
* எக்ஸ்ட்ரீம் இன்டெலிஜென்ஸ்
* சுப்ரீம் இன்டெலிஜென்ஸ்
இந்த மூன்று பெயர்களில் எது மிகவும் சிறந்தது என்பதற்கு மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியை அமெரிக்க அரசு எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும், சீனாவுடனான தொழில் நுட்பப் போட்டியில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஏஐ தொழில்நுட்ப முறைகேடுகளை கண்காணிக்க 'ஏஐ ஃபோர்ஸ்' என்ற புதிய அரசு அமைப்பை உருவாக்க இருப்பதாகவும், இதற்காக விரைவில் ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.