உலகம்

மத்திய கிழக்கை மூடிய அமெரிக்க கொடி.. ஈரானுக்கு சிவப்பு மார்க் - டிரம்ப் பகிர்ந்த புகைப்படம்!

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சர்ச்சை புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

டிரம்ப் பகிர்ந்துள்ள அந்தப் புகைப்படத்தில் மேற்காசியப் பகுதி முழுவதையும் அமெரிக்கக் கொடி மூடியிருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஈரான் தவிர்த்து மற்ற அரசு நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது. அங்கு அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ளன.

வரைபடத்தில், சிவப்பு நிற அம்புக்குறிகள் ஈரானை நோக்கிச் சுட்டிக்காட்டும் வகையில் வரையப்பட்டுள்ளன.

இது ஈரானைச் சுற்றிலும் அமெரிக்கா கொடுத்து வரும் ராணுவ, பொருளாதார மற்றும் ராஜதந்திர அழுத்தங்களைக் குறிப்பதாக விவரிக்கப்படுகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சமீபத்திய முன்மொழிவுகளை அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் நிராகரித்து வரும் வேளையில் இப்புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே "பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.