உலகம்

குத்து விளக்கேற்றிய டிரம்ப்.. வெள்ளை மாளிகையில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

நட்சத்திர சமையல் கலைஞர் விகாஸ் கன்னா கலந்துகொண்டார்

வெள்ளை மாளிகையில் இந்திய சமூகத்தினருடன் இணைந்து டிரம்ப் தீபாவளி கொண்டாடினார்.

இந்துக்களின் பிரதான பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டார்.

தீபாவளி கொண்டாட்டங்களின் போது, ​​GOQii சுகாதார தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் விஷால் கோண்டல், நட்சத்திர சமையல் கலைஞர் விகாஸ் கன்னா மற்றும் கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபி தல்லா உள்ளிட்ட பல முக்கிய இந்திய வம்சாவளி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

டிரம்ப்

வெள்ளை மாளிகையில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. குறிப்பாக டிரம்ப் குத்துவிளக்கொன்றை ஏற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.

விழாவில் கலந்துகொண்ட இந்திய சமூகத்தினர் டிரம்ப்புக்கு அனுமன் சாலிசா பிரதியைபரிசாக வழங்கினர்.

அனுமன் சாலிசா பிரதியை டிரம்புக்குப் பரிசளித்ததில் பெருமைப்படுவதாக விஷால் கோண்டல் தனத்துய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், "ஓவல் அலுவலகத்தில் ஒரு கூட்டு மகிழ்ச்சித் தருணம். அதிபர் டொனால்ட் டிரம்புடன் தீபாவளியைக் கொண்டாடியது ஒரு கௌரவம்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT