வெனிசுலாமீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ட்ரென் டி அராகுவா என்ற குற்றக் கும்பலின் தலைவர், ஹெக்டர் ரஸ்தன்போர்டு கெரேரோ புளோரஸ் கொல்லப்பட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலா நாட்டின் பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்புடன் இந்த ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெனிசுலாவின் குற்றக் கும்பலான இந்த ட்ரென் டி அராகுவா, கெரேரோ தலைமையில் கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளுக்கு விரிவடைந்து, புலம்பெயர்ந்தோரை மிரட்டி பணம் பறிப்பதில் இருந்து பாலியல் கடத்தல், காசுக்கு கொலை (கூலிப்படை) கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது.
தற்போது அமெரிக்கா உட்பட எட்டு நாடுகளில் இதன் அமைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தந்த நாடுகளில் இருக்கும் உள்ளூர் குற்ற அமைப்புகளுடன் சகவாசத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.