உலகம்

டொராண்டோ தெரு விழாவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற வருடாந்திர கலாச்சார திருவிழாவான "சல்சா ஆன் செயின்ட் கிளேர்" தெரு விழாவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவ்விழாவில் ஏராளமான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதால், அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றவாளி இன்னும் பிடிபடாததால், அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

டொராண்டோவின் மிகவும் பிரபலமான வருடாந்திர கலாச்சாரக் கொண் டாட்டங்களில் ஒன்றாக சல்சா ஆன் செயின்ட் கிளேர் திருவிழா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT