உலகம்

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தலைவர்கள் யார்.. யார்..?

ஐரோப்பிய கண்டத்தில் அதிக சம்பளம் பெறும் உலகத் தலைவராக சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் கை பெர்மெலின் திகழ்கிறார்.

உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் அரசுத் தலைவராக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முதலிடத்தில் உள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் படிகள் குறித்து எப்போதும் பொதுமக்களிடையே பெரும் ஆர்வம் நிலவி வருகிறது. அரசு நிர்வாகத்தை சீராக நடத்துவதற்கும், திறமையான நபர்களை அரசியலுக்கு ஈர்ப்பதற்கும் சில நாடுகள் தங்கள் நாட்டின் தலைவர்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஊதியத்தை வழங்குகின்றன. அந்த வகையில், சர்வதேச அளவில் மிக அதிக ஆண்டு சம்பளம் பெறும் முதன்மை டாப் 5 உலகத் தலைவர்களின் விவரங்கள் இதோ:

1. சிங்கப்பூர் பிரதமர்: லாரன்ஸ் வோங்

உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் அரசுத் தலைவராக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முதலிடத்தில் உள்ளார்.

ஆண்டு வருமானம்: 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26.9 கோடி / அமெரிக்க மதிப்பில் 2.8 மில்லியன் டாலர்)

சமீபத்தில் சிங்கப்பூர் அரசு அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஊதிய அமைப்பை மாற்றியமைத்தது. இதன்படி, லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம் 64 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமக்கு உயர்த்தப்பட்ட கூடுதல் ஊதியத் தொகையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நற்பணி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

2. ஹாங்காங் தலைமை நிர்வாகி: ஜான் லீ

பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியான ஜான் லீ இருக்கிறார். ஆண்டு வருமானம் சுமார் 7,19,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.03 கோடி)ஆசியாவின் முக்கிய நிதி மையமாகத் திகழும் ஹாங்காங்கில், அரசு உயர் அதிகாரிகளுக்கு தனியார் துறைக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது.

3.சுவிட்சர்லாந்து அதிபர்: கை பெர்மெலின்

ஐரோப்பிய கண்டத்தில் அதிக சம்பளம் பெறும் உலகத் தலைவராக சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் கை பெர்மெலின் திகழ்கிறார். ஆண்டு வருமானம் சுமார் 6,06,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.08 கோடி) சுவிட்சர்லாந்தின் சுழற்சி முறை அதிபர் ஆட்சி அமைப்பில், நாட்டின் கூட்டாட்சி கவுன்சில் உறுப்பினர்களுக்கு உயரிய ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படுகின்றன.

4.அமெரிக்க அதிபர்: டொனால்ட் டிரம்ப்

உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆண்டு வருமானம் 4,00,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.35 கோடி) அமெரிக்க அதிபரின் அடிப்படைச் சம்பளம் சட்டப்படி நிலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, வெள்ளை மாளிகை இருப்பிடம், பாதுகாப்பு மற்றும் பயணங்களுக்கான பிரத்யேக படிகளும் வழங்கப்படுகின்றன.

5. ஆஸ்திரேலிய பிரதமர்: அந்தோணி அல்பானீஸ்

டாப் 5 பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் உள்ளார். ஆண்டு வருமானம் சுமார் 3,95,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.31 கோடி)

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற ஊதியக் குழுவின் வழிகாட்டுதலின்படி நாட்டின் பிரதமருக்கான இந்த உயரிய ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ரூ.33.60 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

சிங்கப்பூர் போன்ற நாடுகள் தங்கள் நாட்டு அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கும் மிக அதிக ஊதியம் வழங்குவதற்கு முக்கியக் காரணமாக, தனியார் துறையில் இருக்கும் சிறந்த தொழில்முறை நிபுணர்களையும், திறமையான தலைவர்களையும் அரசு நிர்வாகத்திற்குள் கொண்டு வருவது. உயரிய ஊதியம் வழங்குவதன் மூலம் அரசு உயர் பதவிகளில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாகத் தடுப்பது போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT