அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பிரபல கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் விரைவாக ஓட்டிச்சென்ற கார், லாரி ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது.
ஜுபிடர் ஐலேண்ட் பகுதியில் குடியிருப்பு சாலையில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டு அவரது கார் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார். அவர் போதையில் காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.
இந்நிலையில், காரை விரைவாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக டைகர் வுட்ஸ் கைது செய்யப்பட்டார். சில மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஏற்கனவே இதுபோல் போதையில் காரை ஓட்டிய குற்றச்சாட்டின் கீழ் டைகர் வுட்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.