உலகம்

கண்ணிவெடியில் சிக்கிய 3 எண்ணெய் கப்பல்கள்.. நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹார்முஸ் திறக்கப்படாது என ஈரான் திட்டவட்டம்

ஹார்முஸ் ஜலசந்தியில் சில கப்பல்கள் தீப்பற்றி எரிந்ததை பிரிட்டன் ராணுவத்தின் கண்காணிப்புக் குழுவும் உறுதி செய்துள்ளது.

ஹார்முஸ் வழியே சென்ற 3 கப்பல்கள் கண்ணிவெடியில் சிக்கின.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதியின்றி செல்ல முயன்ற 3 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஹார்முஸ்

கடந்த பிப்ரவரியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடுத்தன. அதுமுதல் மத்திய கிழக்கில் இருந்து உலக நாடுகளுக்கு எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்பட்டுவந்த கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் எடுத்து அது வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த கடல்வழிப்பாதையில் நிலவும் பதற்றத்தால் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் உலக அளவில் எண்ணெய், எரிபொருள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டன.

பின்னர் புரிந்துணர்வு மூலம் கப்பல் போக்குவரத்து அவ்வழியாக சற்று இயல்புக்கு வந்தபோதும் தங்கள் அனுமதியை பெற்ற பின்னரே அவ்வழியே கப்பல்கள் செல்ல வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

ஹார்முஸின் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே வெளிநாடுகளின் சரக்குக் கப்பல்கள் அனுமதிக்கப்படும் நிலையில், மற்ற பாதைகளில் கப்பல்களை தகர்க்கும் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளன.

மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும், அவர்களின் கூட்டாளிகளின் கப்பல்களுக்கும் ஈரான் தடை விதித்துள்ளது. மறுபுறம் அமெரிக்க கடற்படை ஹார்முஸை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகின்றன.

தாக்குதல்

இந்த சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தங்களின் அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயன்ற 3 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி தீப்பற்றி எரிந்ததாக ஈரானின் புரட்சிகர காவல் படை நேற்று அறிவித்தது.

3 கப்பல்களும், ஈரானிய அதிகாரிகளின் எச்சரிக்கையை புறக்கணித்து ரேடார் கருவிகளை அணைத்தபடி அவ்வழியாக சென்றதாக, ஈரான் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் சில கப்பல்கள் தீப்பற்றி எரிந்ததை பிரிட்டன் ராணுவத்தின் கண்காணிப்புக் குழுவும் உறுதி செய்துள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளான கப்பல்கள் பற்றியும் அதில் பயணித்தவர்கள் பற்றியும் எந்த தகவலும் இல்லை.

திட்டவட்டம்

மறுபுறம் தங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றும்வரை ஹார்முஸ் முழுமையாக திறக்கப்படாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் செய்தித்தொடர்பாளர் ஹொசைன் மொஹேபி நேற்று பேசுகையில், “ஹார்முஸ் ஈரான் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும், ஈரான் அரசின் நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை அது ஒருபோதும் திறக்கப்படாது” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT