பிரிட்டன் மன்னர்  
உலகம்

பிரிட்டனில் இருந்து பிரியும் மூன்று நாடுகள்?.. ஐரோப்பாவில் திருப்பம்

அவை பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் வருகின்றன.

ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளின் தலைவர்கள், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லும் பிரகடனத்தை இன்று கூட்டாக வெளியிட உள்ளனர்.

ஐரோப்பிய கண்டத்தில் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை தனித்தனி நாடுகளாக செயல்பட்டு வந்தாலும் அவை பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் வருகின்றன.

பிரிவினை குரல்கள்

பிரிட்டனின் கீழ் இருந்து விலக வேண்டும் என்று இந்த நாடுகளில் பிரிவினை குரல்கள் பல காலமாக உள்ளன.

வரலாற்றிலேயே முதன்முறையாக மூன்று நாடுகளில் நடந்த தேர்தல்களில் இந்த பிரிவினை கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் வெற்றி பெற்று தற்போது ஆட்சியில் உள்ளன.

வேல்சில், பிளெய்ட் சிம்ரு கட்சி, ஸ்காட்லாந்தில் எஸ்.என்.பி. கட்சி, வடக்கு அயர்லாந்தில், சின் பெயின் கட்சி செல்வாக்குடன் ஆள்கிறது.

பிரகடனம்

இந்நிலையில் வேல்ஸ் தலைநகர் கார்டிப் நகரில் இன்று நடக்கும் கூட்டத்தில், மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

அப்போது, பிரிட்டனில் இருந்து பிரிவது குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனத்தில், அவர்கள் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது.

லண்டன் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காகக் காத்திருக்காமல், அந்தந்த நாட்டு மக்களே பொதுவாக்கெடுப்பு குறித்துத் தீர்மானிக்கும் உரிமை. சுதந்திரத்திற்கு பிறகு ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் தனிநாடுகளாகவும், வட அயர்லாந்து அயர்லாந்துடன் இணைவது ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாக உள்ளன.

பிரிட்டன் பிரதமர் கருத்து

நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், "பொதுமக்களிடையே தெளிவான ஒருமித்த கருத்து நிலவினால், ஸ்காட்லாந்தில் மீண்டும் சுதந்திர வாக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிப்பேன்" என்று கூறியிருக்கிறார். இது விவாதமாகி வருகிறது.

இருப்பினும், பிரிட்டன் பிரதமர் அலுவலகம், "பொதுமக்களின் ஆதரவு இல்லாத நிலையில் இப்போது உடனே வாக்கெடுப்பு நடத்த முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் முதல் இலக்கு" எனப் பதிலளித்துள்ளது.

டிரம்பின் கருத்து

அயர்லாந்தின் டப்ளினுக்கு கோல்ப் போட்டியை பார்க்க வருகை தந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வட அயர்லாந்து அயர்லாந்து குடியரசுடன் இணைந்துஒன்றிணைந்த அயர்லாந்தாக மாறுவது மிகவும் சிறந்தது என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT