உலகம்

உயரத்தால் கோடீஸ்வரி ஆகிய இளம்பெண்- வீடியோ

3 ஆண்டுகளுக்கு முன்பு உதித்த யோசனையின் காரணமாக தனது உயரத்தையே சாதகமாக மாற்ற முடிவு செய்தார். வீடியோக்களுக்கு அமோக வரவேற்பு இருந்தது.

மாலை மலர்

பெண்கள் சராசரி உயரத்தைவிட அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஒரு பிரச்சனையாகவே கருதுவார்கள். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 36 வயதான டோனா ரிச் என்ற பெண்ணுக்கு அவரது உயரமே ஒரு பிரச்சனையாக இருந்தது. 6 அடி ஒரு அங்குலம் உயரம் கொண்ட அவர் ஆரம்பத்தில் தனது அதிகமான உயரத்தை வெறுத்தார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு உதித்த யோசனையின் காரணமாக தனது உயரத்தையே சாதகமாக மாற்ற முடிவு செய்தார்.

அதன்படி டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உயரம் தொடர்பாகவும், ஆண்களை ஈர்க்கும் வகையிலும் சில வீடியோக்களை வெளியிட்டார். அவரது இந்த வீடியோக்களுக்கு அமோக வரவேற்பு இருந்தது. இதனால் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து ஏராளமான வீடியோக்கள் பதிவிட்டு வருமானம் ஈட்ட தொடங்கினார்.

இதன்மூலம் ரூ. 6 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ள அவர் கூறுகையில், ஒரு காலத்தில் எனது உயரம் பாதுகாப்பின்மைக்கான ஆதாரமாக இருந்தது. இப்போது எனது வெற்றியின் முக்கிய பகுதியாக மாறியுள்ளது என்றார். அவர் ஹீல்ஸ் அணியும் போது அவரது உயரம் 6 அடி 8 அங்குலமாக அதிகரிக்கிறது. இது அவரது கவர்ச்சியை மேலும் அதிகரிக்க செய்வதாக பயனர்கள் பலரும் பதிவிட்டுள்ளனர்.